உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இந்தியர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு விரைந்து மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மோடி பேச்சுகளை நடத்தியிருந்தார். இதனையடுத்து, இராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்படும் இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும் பத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் ரஷ்யா உறுதி செய்யும் என எதிர்பார்க் கப்படுகிறது. இவர்கள் உக்ரைனுடனான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் தரவுகளின்படி சுமார் 30 முதல் 40 இந்தியர்கள் வரையில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் நாடு திரும்ப விரும்பினாலும் அது நடக்க வில்லை என்ற தகவல் இதற்கு முன்பு வெளியானது.
ஏற்கனவே ரஷ்ய இராணுவப் பணியில் இருந்த இந்தியர்கள் 10 பேர் நாடு திரும்பினர். ஏனையவர்க ளையும் மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு ரஷ்யாவும் இணக்கம் வெளியிட்டுள்ளது.