கனடாவின் சந்தைகளில் இருந்து கிரீக்லான்ட் சிக்னேசர் ரக யோகட் வகைகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்படுகிறது.
7 months ago

கனடாவின் சந்தைகளில் இருந்து கிரீக்லான்ட் சிக்னேசர் ரக யோகட் வகைகள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கிரிக் யோகட்டின் 24 பக்கட்டுகளைக் கொண்ட யோகட் வகைகளே இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவு பொருளை விற்பனை செய்யக்கூடாது எனவும் பயன்படுத்தக்கூடாது எனவும் விநியோகம் செய்யக்கூடாது எனவும் கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, மணிடோபா, நியூ பிரவுன்ஸ்வீக், நியூ பவுண்ட்லாண்ட், நோவா ஸ்கோசியா போன்ற ஆகிய மாகாணங்களில் இந்த வகை யோகத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உணவு வகைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
