
கைது செய்த ரஷ்ய படையினரை மனிதாபிமான ரீதியில் நடத்துகின்றோம் என்றும் ரஷ் யாவிடம் ஒப்படைப்பது குறித்த பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் உக்ரைன் தெரிவித்துள் ளது.
கடந்த வாரம் உக்ரைன் படை ணயினர் சிறைபிடித்த ரஷ்யாவின் போர் கைதிகள் குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான உக்ரைனின் பாராளுமன்ற ஆணையாளர் டிமிட்ரோ லுபினெட்ஸ் தெரி வித்தார்.
நீங்கள் ரஷ்ய படையினர் சரணடைவதை பார்த்திருப்பீர்கள். உக்ரைன் படையினர் ஜெனிவா சாசனத்தின் படி போர் கைதிகளை கையாள்வதை பார்த்திருப்பீர்கள். ரஷ்ய படையினரின் யுத்த கால உரிமைகளை உறுதி செய்வதை பார்த்திருப்பீர்கள் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ரஷ்ய படையினர் எவரும் சித்திரவதை செய்யப்படவில்லை. ஆனால், ரஷ்ய படையினர் அதனை செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
