யாழ்ப்பாணத்தில் வணிகர் கழகம், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

5 months ago


யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் நேற்று (28.07.2024) மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, படுகொலை செய்யப்படவர்களுக்கு மதத் தலைவர்களால் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், மதத்தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்