வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கனடாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கனடாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.
இந்த வன்முறைக்கு எதிராக கனடாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 11) ஆயிரக் கணக்கான இந்துக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டங்களில் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் யூத சமூகத்தினரும் பங்கேற்றனர்.
கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந் துக்களைப் பாதுகாக்க பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பங்களாதேஷில் இந்துக்களுக்கு நடந்த வன்முறையைக் கண்டித்து அமெரிக்காவில் நியூயோர்க்கிலும், இங்கிலாந்தில் லண்டனிலும் கூட நேற்று முன்தினம் ஓகஸ்ட் 10 சனிக்கிழமையன்று ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.
இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர்.
“இந்துக்களின் உயிர் முக்கியம்" என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முன்பு சனிக்கிழமை பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.