தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பேரவை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புகள் குறித்து மீளாய்வு செய்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் ஆறுமாதங்களிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகள் நபர்களின் நிதிகளை முடக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அந்த அமைப்புகள் தனிநபர்களிற்கு நிதி வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.