யாழ்.வட்டுக்கோட்டையில் பல லட்சம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களை தீயிட்டு எரித்த, நபர் பொலிஸாரால் கைது
யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலிப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 இலட்சம் பெறுமதியான நாணயத்தாள்களை தீயிட்டு எரித்துள்ளார்.
அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.
இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த நாணயத் தாள்களை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இது குறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் 42 வயதுடைய, 3 பிள் ளைகளின் தந்தையான குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.