இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவிப்பு

2 months ago



இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக மஹரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவித்தார்.

தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக மகேந்திர சோமாதிலக்க கூறினார்.

இதேவேளை ஆரம்பத்தில் புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம் விரைவில் குணப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல், கணுக்கால் வீக்கம் ஏற்படுதல் என்பன புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் என வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்