கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் காசாவுக்குச் செல்லத் தடை விதிக்கப்படும் உறுதி கூறுகிறார் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி.

3 months ago

கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் காசாவுக்குச் செல்லத் தடை விதிக்கப்படும் உறுதி கூறுகிறார் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி.

கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயு தங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படும் என கனடிய வெளி விவகார அமைச்சர் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி இந்தத் தகவலை வெளியிட்டார்.

கியூபெக்கில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்த சில வாரங்களுக்குப் பின் னர் இந்தத் தகவல் வெளியானது.

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அங்கீகரிப்பதை நிறுத்துவதற்கான ஒரு பிரேரணையை லிபரல் - புதிய ஜனநாயகக் கட்சிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்