பல அரசியல் தலைவர்கள் மாவை சேனாதிராஜாவை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்த்து வருகின்றனர்

பல அரசியல் தலைவர்கள் மாவை சேனாதிராஜாவை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்த்து வருகின்றனர்
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல அரசியல் தலைவர்கள் அவரது உடல் நிலை தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று குடும்பத்தாரிடம் கேட்டறிந்து கொள்கின்றனர்.
குளியலைறைக்குச் செல்லும் போது கீழே தவறி விழுந்த மாவை சேனாதிராஜா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதுடன், அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரை அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், பல அரசியல் தலைவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று குடும்பத்தாரிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று மாவையை பார்வையிட்டார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சுமந்திரன் ஆகியோர் மாவையை நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
