விபத்து தொடர்பில் எம்.பி அர்ச்சுனா இராமநாதனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

1 month ago



யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி, பேஸ்லைன் வீதியில் காரை மோதி நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.