கொக்குத் தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதைகுழிகள் உள்ளன என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

4 months ago


கொக்குத் தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதைகுழிகள் உள்ளன என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்று செவ்வாய்க் கிழமை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குத்தொடு வாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:-

கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விடயமானது ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக் கப்பட்ட கோரிக்கை சர்வதேச பொறி முறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்க ளோ, பேராசிரியர்களோ இந்த கண்கா ணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு, மூன்று நாட்கள் பரமு புஷ்பரட்ணம் வந்திருந்தார். ஆனால் அவரும் பின்னர் வரவில்லை. ஏனோ தெரியவில்லை. இருந்தாலும் எமக்கு இந்த உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.

இலங்கை அரசாங்கம் கண்டுபிடிக் கப்பட்ட எத்தனையோ படுகுழிகள் தொடர்பில் இதுவரை நீதியான, நேர்மையான வகையில் அறிக்கைகள் வெளியிடவில்லை. 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்குளாய், கொக்குத் தொடுவாய், கர்நாட்டுக்கேணி ஆகிய 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் இடம் பெயர்ந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் மீள்குடி யேற்றப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது இப் பிரதேசம் இராணுவ பிரதேசமாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு வட்டுவாகலில், கடலில், முகாமில் என்று பல பகுதிகளில் வைத்து கையளிக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள் இந்த புதைகுழியில் அகப்பட்டிருக்கலாம் என்பது மக்களுடைய நம்பிக்கை. இவ்வாறான நிலையில் அகழ்வை செய்து இப்போது முடிந்துவிட் டது என கூறுகின்றார்கள். கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் இவ்வாறான புதைகுழிகள் உள்ளன என்பது இந்த மக்களுடைய கருத்து. ஆனால் இதற்கான ஒரு நீதி கிடைக்கவில்லை.

உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை. எங்களுக்கு தேவை சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும். எத்தனை தாய்மார் குழந்தைகளை தேடி, பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள்.

அவர்களுடைய ஏக்கம், அவர்களு டைய கண்ணீர், இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.


அண்மைய பதிவுகள்