கனடா டொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்கள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (17 ஆம் திகதி) மாலை டொரன்டோ அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட இருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பலியானவர்கள் 54 வயதான அரஸ் மிஸ்ஸாக், 44 வயதான சமீரா யூசப்பி என செவ்வாய்க்கிழமை (18 ஆம் திகதி) வெளியிட்ட அறிக்கையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பலியானவர்கள் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் இணை உரிமையாளர்கள் என தெரியவருகிறது.
இதில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரி மரணமடைந்த மூன்றாவது நபர் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
46 வயதான அவரது அடையாளம் பொலிஸாரினால்வெளியிடப்படவில்லை.ஆனாலும் துப்பாக்கிதாரி அலென் கெட்ஸ் என தெரியவருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
