காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவிப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார கல்வி பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நிரஞ்சன் திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
தூசி உள்ளிட்டவை நுரையீரலைச் சென்றடையும் போது அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த காலங்களில், புகைபிடிப்பவர்களுக்கு மாத்திரம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில், நுரையீரல் பாதிப்படைந்த பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தளவுக்குக் காற்று மாசடைந்து வருவதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
