
பாராளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனை வழிநடத்துவதற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுப்பினர்களுக்கு இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா வரம்பில் உள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என பாராளுமன்ற புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
