கவச வாகனத்தில் வந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணிநேர சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது சந்தேகத்துக்கிடமாக ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய 22 வயது இளைஞன் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மற்றும் சம்மாந்துறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.