யாழ்.கொடிகாமத்தில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

5 months ago


யாழ். கொடிகாமம் பகுதியில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் எழுதுமட்டு வாழ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யப்பட் டார். இவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவராவார்.

இரண்டு லொறிகளில் மணல் ஏற்றிச் சென்றவர்களிடம் 43 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற போது யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசேட பொலிஸார் அவரை கைது செய்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின ரால் அழைத்து செல்லப்பட்டனர்.

கைதான பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.