யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தை அண்மித்து இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்

2 months ago



யாழ்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்குப்பிட்டிப் பாலத்தை அண்மித்து வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் பாய்ந்ததில் விபத்து சம்பவித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்று நீண்ட நேரமாக படுகாயமடைந்த நிலையில் கிடந்த நபரை அந்தப் பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

44வயதான நபர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.