யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லூட்சன் சூரியபண்டாரா தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் போக்குவரத்துப் பொலிஸார் எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.