ஆயுள்வேத வைத்தியர்களின் இடமாற்றம், வைத்தியர்களின் தற்காலிக இணைப்பு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை, ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களின் தரப்படுத்தல் தொடர்பான கோரிக்கையை சாதகமான முறையில் அணுகுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.