இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர் காலமானார்.

5 months ago


நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் முதல் தொலைக் காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார்.

தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப் படை அதிகாரியாக சுமனா நெல் லம்பிட்டிய கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய1962ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெல்லம் பிட்டிய ஆவார்.

அந்த நேரத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.