
வவுனியா சேமமடு குளத்தின் வான் பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் (14) மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளதாகவும், நீண்ட நேரமாகிய நிலையில் அவரை காணாமல் நண்பர்கள் தேடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அவரது சடலம் இன்று(15) காலை குறித்த ஆற்றுப் பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.
மகாறம்பைக் குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
