கிளிநொச்சி கந்தசாமி கோயிலடியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்

2 weeks ago



கிளிநொச்சி ஏ -9 வீதியில் கந்தசாமி கோயிலடியில் இன்று(10) காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த குமரேஸ்வரன் யோகலிங்கம் எனும் 75 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ். பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பஸ்சுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.