
தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத் தொடரில் பங்கு பற்றும் இலங்கை பெண்கள் தேசிய அணியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பாஸ்கரன் சானு, சிவநேசன் தர்மிகா, சுரேந்திரன் கௌரி ஆகியோரே இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தத் தொடர் நேபாளத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அணியில் இடம்பிடித்த 3 வீராங்கனைகளும் மகாஜன கல்லூரியில் கல்வி கற்ற போது பாடசாலை அணிகளுக்குத் தலைமை தாங்கியதுடன் தேசிய மட்டத்திலும் சிறப்பாக செயல் பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
