தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி யாழில் கை எழுத்து போராட்டம்

5 months ago


தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்ற போது அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பாக 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் குறித்த கை எழுத்து போராட்டம் இன்றைய தினம்(19) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.












  


 

அண்மைய பதிவுகள்