
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து இலங்கை வெளியேறாது என்று வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது:
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கு நாம் தீர்மானிக்கவில்லை.
அமெரிக்கா சுயாதீன நாடு. முடிவுகளை எடுக்கும் உரிமை அந்த நாட்டுக்கு உள்ளது.
எனினும், உலக சுகாதார அமைப்பில் இருந்து எந்தவொரு நாடும் வெளி யேறுவதை நாம் விரும்பவில்லை.
மாறாக மேலும் பல நாடுகள் இணைந்து குறித்த அமைப்பு வலுவடைய வேண்டும்.என்பதே எமது விருப்பம்.
மாறாக நாடுகள் வெளியேறினால் உலக சுகாதார அமைப்பு பலவீனமடையும் என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
