யாழ்.பல்கலைக்கழகம் சீர்கெட்டு இருப்பதற்கு நிர்வாகம் காரணம்

2 months ago



யாழ்.பல்கலைக்கழகம் சீர்கெட்டு இருப்பதற்கு நிர்வாகம் காரணம் என்று சொல்லப்படுகிறது. நிர்வாகம் ஒழுங்கின்மையால் பல்கலைக்கழகம் சீராக இயங்க முடியாமல் தவிக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவ மாணவிகளின் ஒழுக்கம் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. தமக்கென்ன என்று கண்டும் கண்டுகொள்ளாத மாதிரி இருக்கிறார்கள்.

அதனால் தான் ஒழுக்கம் கெட்டு பல்கலைக்கழகம் இருக்கிறது. 

சிறந்த கல்விக்கு படிப்பு மட்டும் முக்கியமில்லை ஒழுக்கமும் முக்கியம். ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத படியால் தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவ மாணவிகளால் நாடு முன்னேற்றத்தை அடையவில்லை என்பதை காண்கிறோம்.

யாழ்.பல்கலைக் கழகத்துக்குள்ளேயே போதைப் பொருள், மது போதையில் மாணவர்கள் நடமாடுகிறார்கள். மாணவிகள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

வடமாகாண ஆளுநர் தெரிவித்தது போல் மதுபோதைக்கு ஆண்களை விட பெண்கள் அதிமாகியுள்ளனர்.

கலைபீடாதிபதி ரகுராம் அவர்கள் செய்த நடவடிக்கை சரியானது என்று சொல்லப்படுகிறது. இவர் மூலம் திருத்தம் வருமோ வரவில்லையோ ஒரு பயம் இருக்கும்.