கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லைப் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான கண்ணகிநகர், புன்னைநீராவி, தர்மபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
குறித்த சம்பவமானது நேற்று (31.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கண்ணகிநகர், புன்னைநீராவி, தர்மபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 44, 26 ,30 ,19 ஆகிய வயதுடையவர்கள் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
