தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க தேசிய மக்கள் சக்திக்கு -18, ஐக்கிய மக்கள் சக்திக்கு -05, புதிய ஜனநாயக முன்னணிக்கு - 02, இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு -01, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு -01, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு -01 சர்வஜன அதிகாரம் கட்சிக்கு -01 என தேசிய பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி 159 இடங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 40 இடங்களையும் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 இடங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 05 இடங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 03 இடங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 03 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 01 இடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 இடத்தையும் வெற்றி கொண்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
நாட்டின் 22 தேர்தல் மாவட்டத்தில் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சுயேச்சைக் குழு -171 ஆசனத்தையும், கைப்பற்றி உள்ளதுடன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1 ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.