கடந்த ஜூன் மாதம் காலமான இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டசபை அஞ்சலி செலுத்தியது.
அண்மைய மாதங்களில் காலமான இந்திய அரசியல் தலைவர்களான மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்தாதெப் பட்டாச்சார்யா, புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, முனானாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பதமநாபன், மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் ஆகியோருக்கும் சட்டசபை அஞ்சலி செலுத்தப்பட்டது.