பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்தால் 14 வருடங்கள் தமிழ் அரசுக் கட்சியில் இருந்திருக்க மாட்டேன். கே. வி.தவராசா தெரிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்தால் 14 வருடங்கள் தமிழ் அரசுக் கட்சியில் இருந்திருக்க மாட்டேன். சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய்விடுவார் கே. வி.தவராசா.
சனநாயக தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், நாட்டை ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளாக இருந்தாலும் பிரதமர்களாக இருந்தாலும் தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும். எனக்கு அவ்வாறு ஆசை இருந்திருக்கவில்லை.
தமிழ்த் தேசியத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். தந்தை செல்வாவின் மறைவு நிகழ்வில் கொடிகள் கட்டியபோது எனக்கு ஏற்பட்டது.
அந்த எண்ணத்தில் தமிழ் அரசு கட்சியில் இணைந்தேன். 14 வருடங்கள் பயணித்தேன். பல்வேறு தவறுகளை தலைவருக்கு சுட்டிக்காட்டினேன். ஆனால், எவையும் நிவர்த்தி செய்யப்படவில்லை.
தமிழ்த் தேசியத்தை அழிக்கும் செயல்பாடு கட்சிக்குள் இடம்பெற்று வருகின்றமையை தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தால் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தமிழ் அரசு கட்சியில் இருந்த சிறீதரனும் எம்மோடு சேர்ந்து விலகியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் அதனை செய்யவில்லை. விரைவில் அவர் முகவரி அற்றுப் போய்விடுவார் -என்றார்.