நாட்டில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் பதிவாகின்றன.
4 months ago
நாட்டில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் பதிவாகின்றன என்று மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தினசரி பதிவாகும் 10 மரணங்களில் 8 தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. இவற்றில் அதிகமானவை புகைப்பிடித்தல் மற்றும் மது அருந் துவதால் ஏற்படுகின்றன.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 121 கோடி ரூபாய் செலவழிக்கின்றனர். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாட்டில் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக ரீதியான பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்றும் அந்த மையம் மேலும் தெரிவித்தது.