தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையை சுமக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள், மாவை சோ. சேனாதிராசா தெரிவிப்பு

2 months ago


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கைகளை சுமந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள், என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முதன்மை வேட்பாளர் சி. சிறீதரன் நேற்று வியாழக்கிழமை அவரை சந்தித்து ஆசிபெற்றபோதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி நேற்றைய தினம் யாழ். மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

முதன்மை வேட்பாளர் சிறீதரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் பின்னர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.