யாழ்.மாவட்ட பதில் செயலர் பிரதீபனுக்கும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவுக்கும் இடையே சந்திப்பு

2 months ago



யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19.10.2024) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்யா விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன உடனிருந்தார்கள்.


அண்மைய பதிவுகள்