பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முதல்வர் தெரிவிப்பு.

4 months ago


பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆனால், தங்கள் அரசு நிறைவேற்றி அனுப்பும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தரமாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி நிறுவன தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி.

"மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம்.

இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால். நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பொறுப்புக் கூறுவதை இந்த முறை ஆளுநர் தவிர்க்க முடியாது" என்று தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்