யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

2 weeks ago



யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைப் பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

உடுத்துறை, ஐந்தாம் பனையடிப் பகுதியிலேயே இன்று திங்கட்கிழமை காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு கரையொதுங்கியுள்ளது.

இயந்திரமற்ற நிலையில் அந்தப் படகு கரையொதுங்கி இருப்பதனால், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய படகாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகின் இலக்கத்தைக் கொண்டு, படகின் உரிமையாளரின் விவரத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.