குடிவரவு திணைக்களத்தின் அதிகாரம் இந்திய நிறுவனத்துக்கு தாரைவார்ப்பு -தேசத்துரோகம் என்று சம்பிக்க சாடல்.
நாட்டின் ஆட்புல எல்லை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பு மற்றும் அதிகாரம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்திய நிறு வனத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் வழங்கப்பட்டது. இதுவே அண்மைக்கால தேசதுரோக செயல்பாடாகும் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
வி. எவ். எஸ். புதிய வீசா விதியோகத்துக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம் பழைய முறை மையில் வீசா விநியோக சேவையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் செயல்படவில்லை. அரச அதிகாரி என்ற அடிப்படையில் நாட்டின் சட்டத்துக்கு அமைய கட்டுப்பாட்டாளர் நாயகம் செயல்பட வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் சம்பிக்க குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
"நாட்டின் ஆட்புல எல் லையின் பாதுகாப்பை சவாலுக் குட்படுத்தும் வகையில் பார தூரமான பிரச்னைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்தல் மற்றும் வேலையற்றோரை தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தலை பொருளாதார மீட்சிக்கான திட்டங்களாக அரசாங்கம் கருதுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளின் வருகை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர் அதிகரிப்பு ஆகிய காரணிக ளால் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. இவ்விரு துறைகளும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் செயல்பாடுகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளது.
தேச பற்றாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு தரப்பினர் நாட்டின் ஆட்புல எல்லையை வெளிநாட்டு நிறுவ னத்துக்கு வழங்கியதை கவனத்தில் கொள்ளவில்லை. வி. எவ். எஸ். நிறுவனத்துடனான இந்த புதிய செயல்திட்டத்தால் பெரும் நிதி மோசடி செய்யப்படும் என்பதை உயர்நீதிமன்றத்துக்கு தரவு கட்டமைப்புடன் எடுத்துரைத்தோம்.
இந்த நிலையில், உயர் நீதி மன்றத்தின் அறிவுறுத்தலையும் கவனத்தில் கொள்ளாது அரசாங்கம் செயல்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தன்னிச்சையாக செயல்படுகிறார். குடி வரவு திணைக்கள கட்டுப்பாட் டாளர் அரச அதிகாரி என்ற வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தின் தேவைக்கு அமைய செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் சட்ட ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் - என்றார்.