இலங்கையில் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக ஒரு இராணுவ மேஜர், 6அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி,ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது

சமீபத்திய காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஏனைய தரங்களில் உள்ள 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பின்வரும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
T56 துப்பாக்கிகள் - 7 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் -10 ரிவால்வர்கள் - 14 வெடிமருந்துகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் - 461 போர 12 ரக துப்பாக்கிகள்-58 கல்கடஸ் - 13 ரிப்பீட்டர்கள் - 2
இந்த 2 மாதங்களுக்குள் 354 கிலோகிராம் ஹெராயின், 3,847 கிலோகிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொக்கெய்ன், 181.9 கிலோகிராம் ஹாஷிஷ் மற்றும் 759 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நிதி குற்றப் பிரிவு அடுத்த வாரம் மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ள 29,000 கோப்புகளில் இருந்து நிதிக் குற்றக் கோப்புகளை அந்தப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
