விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டையும் படையலிடப்பட்டது.

4 months ago


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக் கட்டை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலி டப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு புத்தர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.

இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று தொடங்கி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது.

பின்னர் பிரம்மாண்ட கொழுக் கட்டையும் நைவேத்தியம் செய்யப் பட்டது. இந்த விழாவிற்காக கோயில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

பின்னர் அந்தகி கொழுக்கட்டையை நேற்றுக் காலை கோயில் பணியா ளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும். பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.