அம்பாறையில் பாராளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

2 months ago



அம்பாறையில் பாராளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

"பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பிரகாரம்      2024. 10. 04 தொடக்கம் 2024.10. 11 வரையான காலப் பகுதியில்    திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 07 ஆசன தெரிவிற்காக             அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல்   கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்கள் 50 இனதும் நியமனப் பத்திரங்கள்                              கிடைக்கப் பெற்றிருந்தன.

அத்துடன் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியும் 07 சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் சட்ட திட்டங்களுக்கமைய பல்வேறு குறைபாடுகளை கருத்தில் கொண்டு நிராகரித்துள்ளோம்.

இதன்படி தற்போது அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக்குழுக்கள் 43 இனது நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

மொத்தமாக 64 அரசியல் கட்சிகள் உட்பட சுயேச்சைக் குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவித்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயல்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

பெரியளவிலான வன்முறைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை.

எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப் பெற்றிருந்தன.

அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.               

வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்”- என்றார்.