மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது!

5 months ago


பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கை வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு விழாவின் பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே கலந்து கொண்டார். மகாவம்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக

பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச. பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார். 

அண்மைய பதிவுகள்