பனை, தென்னை மரங்களில் கள்ளு இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னையில் விய சாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக் குழு, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், கிராமணி சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் கௌதமன், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.எஸ். பாபு மற்றும் 200 இற்கும் மேற்பட்ட பனை, தென்னை விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.