ரயில் வேலை தொடர்பாக அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை இல்லை எனில் பணிப் பகிஷ்கரிப்பு
ரயில் நிலையப் பொறுப்பு அதிகாரிகளை இணைத்துக் கொள்ளல் மற்றும் அவர்களின் பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய பின்னர் ரயில் நடத்துநர்களின் பதவி உயர் மற்றும் சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் பணிப் பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் அரசாங்கம் அதனை மேற்கொள்ளாது ரயில் நடத்துநர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பளத் திட்டத்தை தயாரித்துள்ளது.
என்றாலும் நடத்துநர்களின் சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக நிலையப் பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு நடைமுறை இடம்பெறாமல் இருந்து வருகிறது.
இது தொடர்பாக பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் தீர்வு கிடைக் கவில்லை.
தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்காவிட்டால் உடனடியாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்துக்குச் செல்ல தீர்மானித்திருக்கிறோம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.