வடமாகாணத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
வடக்கிற்கான 02 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
பலாலி விமான நிலையத்திலிருந்திருந்து உலங்குவானூர்தியில் யாழ் மத்தியகல்லூரி மைதானத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.