இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 months ago

இலங்கையில் சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் போஷாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் குடும்பங்களில் கால் பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்கின்றனர்.
உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் (விற்றமின்கள் கனியுப்புகள் போதியளவு இல்லாமை) போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போஷாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
