ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டி வாக்கு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை கண்காணித்த அதிகாரிகள்.

3 months ago


நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிசாருடன் முதலாம் கட்ட பேரூந்துகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு காலை 08.30 மணிக்குச் செல்வதனை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், தேர்தலில் கடமையில் ஈடுபட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.09.2024) காலை 07.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. 

இவ் நியமனக் கடிதம் வழங்களைத் தொடர்ந்து சரியாக 08.30 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பமாகியது. வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துகள் சென்றன.


அண்மைய பதிவுகள்