கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மஹிந்த அழைப்பு
2 months ago

கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களை மஹிந்த ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துயைாடினார்.
அதிலேயே இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
கட்சி மட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுகளில் ஈடுபட்டுவதற்கு மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாகவும் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
