இஸ்ரேல்- காசா இடையிலான போரில் 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
6 months ago


இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா போர் துவங்கியது. ஓராண்டில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானை சேர்ந்த 5 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 4 பேர் , சிரியாவைச் சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலில் தான் அதிகம் பேர் கொல்லப்பட்டதாக இந்த விவர அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஐ.நா., வரை கொண்டு சென்று இருக்கிறது.
உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
