லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்தமை குறித்து அரசு ஆராயும் -- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளமை குறித்து அரசாங்கம் ஆராயும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.
இந்த விவகாரத்தை மூடிமறைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை.
குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இல்லை.
இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து இந்தநாட்டு மக்களிற்கு நீதி வழங்குவோம்.
மக்கள் வழங்கிய ஆணையை அவமதிக்கமாட்டோம்.
சில யதார்த்தபூர்வமான நெருக்கடிகள் காரணமாகவே சில விசாரணைகள் தாமதமாகின்றன. அரசாங்கத்தின் தலையீடுகளால் தாமதமாகவில்லை.என அவர் தெரிவித்துள்ளார்..
இதேவேளைஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி கோரி சுதந்திர ஊடக இயக்கமும் ஏனைய ஊடக நிறுவனங்களும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் தருணத்தில் லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டும் சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
