சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிப்பு
6 days ago
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.